www.garudabazaar.com

அம்மாவின் பிறந்தநாளில் அமலாபால் செய்த நெகிழ்ச்சி செயல்.. பாராட்டை பெறும் வைரல் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

Amala Paul Celebrating Her Mother Birthday Tree Plantation

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த மைனா திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார்.

குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார். அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver, டீச்சர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார்.

நடிகை அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.  சமீபத்தில் அமலாபால்  தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக லண்டனில் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள டவர் பாலத்தில் நின்று விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

நடிகை அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன்  'ஆடுஜீவிதம்', மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர், கைதி படத்தின் இந்தி ரீமேக் 'போலா' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால். அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுவார்.  சமீபத்தில் நடிகை அமலாபால்,  இந்தோனேசியா நாட்டின் Ubud பகுதியில் சுற்றுலா மேற்கொண்டார். இந்நிலையில் தமது தாயாரின் (அனிஸ் பால்) பிறந்தநாளை முன்னிட்டு நடிகை அமலா பால், மரம் நட்டு வைத்து, இச்செயலை தமது தாயாருக்கு அர்ப்பணிப்பதாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

Tags : Amala Paul

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Amala Paul Celebrating Her Mother Birthday Tree Plantation

People looking for online information on Amala Paul will find this news story useful.