96 தெலுங்கு ஹீரோ படத்தில் இணையும் 80ஸ் ஹீரோயின்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 04, 2019 10:51 AM
சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் அமலா அவருக்கு தாயாக நடிக்கிறார்.
![Amala Akkineni On Board For Sharwanands Film Dream Warrior Pictures bilingual film Amala Akkineni On Board For Sharwanands Film Dream Warrior Pictures bilingual film](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/amala-akkineni-on-board-for-sharwanands-film-dream-warrior-pictures-bilingual-film-news-1.jpg)
தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அமலா. மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1992-ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
5 வருடங்களுக்கு முன்பு ‘மனம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் அவருக்கு தாயாக நடிக்கிறார்.
இதில் கதாநாயகியாக ரீத்து வர்மா மற்றும் நாசர், ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.