மாஸ் லொகேஷனில் உருவாகும் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் வைரல் ஹிட் Song!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 08, 2019 06:23 PM
ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘அலா வைகுண்டபுரம்லோ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சமாஜவராகமனா..’ என்ற பாடலின் லிரிக் வீடியோ ஏர்கனவே ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹாரிகா ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு, ராஜேந்திர பிரசாத், சச்சின் கேட்கர், முரளி ஷர்மா, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில், நவ்தீப், சுஷாந்த், நிவேதா பெத்துராஜ், கோவிந்த பத்ம சூர்யா, பிரம்மாஜி, ஹர்ஷவர்தன், அஜய், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், ‘சமாஜவராகமனா..’ பாடலின் காட்சிகளை மிகவும் அற்புதமான லொகேஷனில் படமாக்க திட்டமிட்ட படக்குழுவினர் தற்போது ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து, இப்பாடலின் வீடியோ மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இசையமைப்பாளர் தமன் இசையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடலை சிரிவெண்ணிலா சீதாராம சாஸ்திரி எழுதியுள்ளார். இப்படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.