இயக்குநர் திரி விக்ரம் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் 19-வது படமான இப்படம் எமோஷனல் எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகிறது.

ஹாரிகா ஹாசினி கிரியேசன்ஸுடன் இணைந்து கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், போஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், நடிகை தபு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு பிஎஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங்கிற்கு இடையே, நடிகர் அல்லு அர்ஜுன் தனது டீமில் இருக்கும் ஒருவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன், தனது டீமில் இருப்பவர்களது பிறந்தநாளை கொண்டாடுவதை ஒரு வழக்கமாக வைத்திருப்பதாக தெரிகிறது.