www.garudabazaar.com

#MeeraMitunArrest: "அவதூறு கருத்தால்" .. 7 பிரிவில் மீரா மிதுன் மீது வழக்கு.. ஆண் நண்பரும் சேர்ந்து கைது.. Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் மீது குறித்து அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததன் காரணமாக நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Meera Mitun friend Abishek Sam also Arrested along with her

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நடிகை மீரா மிதுன் மட்டுமல்லாமல் அவருடைய ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். நடிகை மீரா மிதுன் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசும் மீரா மிதுன், இம்முறை பட்டியல் இனத்தை சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னியரசு தொடுத்த வழக்கின் பேரிலும் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் & இணையவாசிகள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் அதிரடியாக கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அவர் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறார். அத்துடன் மீரா மிதுன், கைது செய்யப்படுவதற்கு முன்பாக, “ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடப்பதா?.. என் மீது போலீசார் கைவைத்தால் நான் கத்தியால் எடுத்து என்னையே குத்திக் கொள்வேன்!” என்பது போல் பேசி உருக்கமாக அழுது வீடியோ பதிவிட்டிருந்தார்.

Meera Mitun friend Abishek Sam also Arrested along with her

இந்நிலையில் அவர் தற்போது கேரளாவில் கைது செய்யப்பட்டு சென்னை காவல்துறையினரால் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அவருடைய ஆண் நண்பரான அபிஷேக் சாம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

#MEERAMITUNARREST: "அவதூறு கருத்தால்" .. 7 பிரிவில் மீரா மிதுன் மீது வழக்கு.. ஆண் நண்பரும் சேர்ந்து கைது.. VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Meera Mitun friend Abishek Sam also Arrested along with her

People looking for online information on Meera Mitun, Meeramithunarrested MeeraMitunArrest BiggBoss3 MeeraMitun will find this news story useful.