LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

அஜித் நடிக்கும் AK61.. படப்பிடிப்பு இந்த ஊர்லயா? வெளிவந்த வைரல் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தின் ‍BTS புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

AjithKumar AK61 Movie Shooting at Vizag BTS Image

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AjithKumar AK61 Movie Shooting at Vizag BTS Image

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.

இந்த சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது.  முக்கிய சாலைகளில் பரபரப்பான பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

AjithKumar AK61 Movie Shooting at Vizag BTS Image

இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார்.  இந்த சென்னை படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இந்த ஏகே61 படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணிபுரிகிறார்.AK61 படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் ஐயப்பனும் கோஷியும் படத்திற்கு தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

AjithKumar AK61 Movie Shooting at Vizag BTS Image

இந்நிலையில் சண்டைப் பயிற்சி இயக்குனர் சுப்ரீம் சுந்தர் குழுவில் உள்ள ஸ்டன்ட் மேன் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகே61 படத்தின் ஸ்டண்ட் கலைஞர்களுடன் எடுத்த‌ BTS புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AjithKumar AK61 Movie Shooting at Vizag BTS Image

People looking for online information on Ajith Kumar, AK61, Arakku Valley, H Vinoth, Supreme Sundar, Vizag will find this news story useful.