நடிகர் தனுஷின் அழகான இரு சகோதரிகளை பார்த்து இருக்கீங்களா... வைரலாகும் குடும்ப போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் என்ற படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த செய்தி இந்திய சினிமா ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியதும் உண்மை. இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன், மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

Dhanush with his sisters photo viral தனுஷின் அழகான இரு சகோதரிகள்

தனுஷ் என்று சொன்னாலே நாம் அனைவருக்கும் அவரது அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் மட்டும் தான் ஞாபகத்துக்கு வருவார். அதன்பிறகு அவரது தந்தை கஸ்தூரி ராஜாவும் ஒரு இயக்குனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதை தாண்டி அவரது குடும்ப உறுப்பினர்களை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக செல்வராகவன் மற்றும் தனுஷுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர்கள் இருவருமே சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி இருப்பதால் பலருக்கும் அவர்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Dhanush with his sisters photo viral தனுஷின் அழகான இரு சகோதரிகள்

தனுஷின் முதல் சகோதரி பெயர் விமலா கீதா. இவர் பல மருத்துவப் படிப்பை பயின்று தற்பொழுது ஒரு பிரபல தனியார் பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். அதேபோல அவரது இரண்டாவது சகோதரி கார்த்திகா தேவியும் ஒரு மருத்துவர் ஆவார்.

அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகான இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dhanush

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush with his sisters photo viral தனுஷின் அழகான இரு சகோதரிகள்

People looking for online information on Dhanush will find this news story useful.