www.garudabazaar.com

பிரபல OTT-யில் பல மொழிகளில் வெளியாகும் அஜித்குமார் நடித்த 'வலிமை'! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா: வலிமை படம் பிரபல ஒடிடியில் வெளியாக உள்ளது

Ajith Kumar Valimai Digital OTT Release on Zee5 Tamil

கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Ajith Kumar Valimai Digital OTT Release on Zee5 Tamil

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடித்தனர். ராஜ் ஐயப்பா முக்கிய தம்பி வேடத்தில் நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்ற, சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றினார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்தார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Ajith Kumar Valimai Digital OTT Release on Zee5 Tamil

வலிமை படம் பிரசித்தி பெற்ற ARRI Alexa கேமரா கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவின் விலை 98,200 USD டாலர் ஆகும்.  2011 இல் "ஹ்யூகோ", 2012 இல் "லைஃப் ஆஃப் பை", 2013 இல் "கிராவிட்டி", 2014 இல் "பேர்ட்மேன்", 2015 இல் "தி ரெவனன்ட்" மற்றும் "ஸ்பாட்லைட்", 2016 இல் "மூன்லைட்", "தி ஷேப் ஆஃப் வாட்டர்" மற்றும் 2017 இல் "பிளேட் ரன்னர் 2049", 2018 இல் "கிரீன் புக்" மற்றும் "ரோமா" மற்றும் 2019 இல் "பாராசைட்" மற்றும் "1917" ஆகிய படங்கள் இந்த கேமராவை கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. 

Ajith Kumar Valimai Digital OTT Release on Zee5 Tamil

ASPECT RATIO

சினிமாவை பொறுத்தவரை 2.39:1 என்ற விகிதத்தில் அதாவது 2.39 அகலம், 1 உயரம் என திரை இருக்கும். தியேட்டரில் இந்த விகிதத்தில் தான் நாம் சினிமா படங்களை பார்க்கிறோம். இதில் வலிமை படத்தில் 2.66:1 என்ற விகிதத்தில் அதாவது 2.66 அகலம், 1 உயரம் என திரை இருக்கும். OTT- க்காக Aspect Ratio-வில் சில மாறுதல்களை படக்குழு செய்திருக்கலாம். 

Ajith Kumar Valimai Digital OTT Release on Zee5 Tamil

VALIMAI OTT

வலிமை படத்தின் ஆடியோ 11:1 ஒலி கலவையில் அமைந்துள்ளது. தியேட்டர்களுக்கான ஒலிக்கலவையும் OTT-க்காக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வலிமை படம் Zee5 தமிழ் ஒடிடியில் வெளியாக உள்ளது. தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை Zee5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லா படங்களையும் போல் மார்ச் 24 (வியாழன்) - மார்ச் 25 (வெள்ளி) அன்று வார இறுதியில் வலிமை படம் ரிலீசாக உள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Digital OTT Release on Zee5 Tamil

People looking for online information on Ajith Kumar, AK, Boney kapoor, H Vinoth, OTT, Valimai, Valimai Blockbuster, Zee Studios, Zee5 Tamil will find this news story useful.