சிவகார்த்திகேயனின் டாக்டர் - கோவாவுக்கு பறந்த படக்குழு.. படப்பிடிப்பின் நிலை என்ன..?
முகப்பு > சினிமா செய்திகள்சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்குகிறார். இதில் ப்ரியங்கா மோகன், வினய், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.
இந்த நிலையில் கோவாவில் நடைபெற்ற டாக்டர் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது. டாக்டர் படத்தின் கோவா ஷெட்யூலை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து படக்குழுவின் சார்பாக அங்கிருந்து கிளம்பும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இதையடுத்து படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் ஆரம்பிக்கவுள்ளன.
Tags : Sivakarthikeyan, Nelson Dilipkumar, Doctor,