ஹவுஸ் ஓனரை வெளியிடும் தளபதி பட தயாரிப்பு நிறுவனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை பிரபல தயாரிப்பு நிறிவனம் கைப்பற்றியுள்ளது.

AGS Cinemas takes over Tamil Nadu theatrical release of Lakshmi Ramakrishnan's

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படத்தில் பசங்க கிஷோர் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக வைத்து தீவிரமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவையும், பிரேம் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது.