அக்னிச் சிறகுகள் படத்துக்காக புதிய அவதாரம் எடுத்த பிரபலம் யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 29, 2019 07:45 PM
மூடர் கூடம் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் நவீன் தற்போது அக்னிச் சிறகுகள் படப்பணியில் உள்ளார்.

விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன், அருண் விஜய், நாசர், பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கும் அந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பின் டி. மதன் தயாரித்து வருகிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் அப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்தின் கேரக்டர் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெளியான விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசனின் போஸ்டர்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர், மற்றும் பிக்பாஸ் பிரபலம் செண்ட்ராயனின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. அக்னிச் சிறகுகள் படத்தில் அவர் டாக்சி தல என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் இயக்குநர் நவீனுடன் முதல் படத்தில் இருந்து பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.
#மூடர்கூடம் தொடங்கி இன்று வரை ஸ்க்ரிப்ட் எழுதும்போது சென்றாயனை தவிர்க்க முடிவதில்லை என்னால்#SentrayanAsTAXITHALA#AgniSiragugal@NaveenFilmmaker @vijayantony @arunvijayno1 @aksharahaasan1 @raimasen @JSKfilmcorp @TSivaAmma @pjaijo @Natarajanmusic @KA_Batcha @DoneChannel1 pic.twitter.com/vyfbwj7qLS
— Naveen.M (@NaveenFilmmaker) November 29, 2019