“நட்பு தொடரும், உறவு முறிந்தது!”.. 15 வயது குறைவான காதலருடன் Break up! - சுஷ்மிதா சென் பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சுஷ்மிதா சென் தமது காதல் முறிவு குறித்து தற்போது அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்திருக்கிறார்.
நடிகை, முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென் (Sushmita Sen):
இந்திய அளவில் பிரபலமான நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென், தமிழில் நடித்த திரைப்படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்தாலும், அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திரைப்படங்களாக இருக்கின்றன. பிரவின் காந்த் இயக்கத்தில் நடிகர் நாகார்ஜூனா நடித்து வெளியான ரட்சகன் திரைப்படத்தில் சுஷ்மிதாசென் நாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே இந்திய அளவில் ஹிட்டாகின.
பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தில் சுஷ்மிதா சென் அனைவரையும் கவர்ந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சுஷ்மிதா சென், ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார்.
தனிப்பட்ட வாழ்க்கை:
சுஷ்மிதா சென், நடித்த ஆர்யா எனும் வெப்சீரிஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து ஆர்யா வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்திலும் சுஷ்மிதா சென் நடித்து வருகிறார்.
தற்போது 45 வயதாகும் சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
காதல் விவகாரம்:
இந்த நிலையில்தான் சுஷ்மிதா சென் தம்முடைய காதல் விவகாரம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருப்பது அவருடைய ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி தன்னைவிட 16 வயது குறைந்த ரோஹ்மன் சாவ்ல் (Rohman Shawl) என்ற மாடலை கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து சுமார் மூன்று வருடமாக சுஷ்மிதா சென் காதலித்து வந்திருக்கிறார்.
அவள் போய்விடுவாள்:
இவர்களின் காதலில் பிரச்சனை எழுந்ததாக சில மாதங்களுக்கு முன்பாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பலரும் சுஷ்மிதா சென் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்று கிட்டத்தட்ட எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் சுஷ்மிதா சென் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பெண்கள் எப்போதும் அவர் மாறுவார் என்று நினைக்கின்றனர். ஆனால் அவர் மாறமாட்டார். அவள் போகமாட்டாள் என்று ஆண்களும் நினைக்கின்றனர். ஆனால் அவள் சென்று விடுவாள்!” என்று தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் சுஷ்மிதா சென் தம்முடைய காதலரைப் பிரிந்து விட்டதாக பலரும் பல வகையிலும் பேசத்தொடங்கினர். எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தம்முடைய கருத்தை சுஷ்மிதா சென் வெளியிடாமல் இருந்து வந்தார்.
காதல் முறிந்தது, நட்புடன் பழகுவோம் - சுஷ்மிதா சென்:
இந்நிலையில் தற்போது சுஷ்மிதா சென் தம்முடைய மௌனத்தை கலைத்து இருக்கிறார். அதன்படி இன்ஸ்டாகிராமில் சுஷ்மிதா சென் நேரடியாகவே இந்த விவகாரத்திற்கு விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதில், காதல் உறவு முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கும் சுஷ்மிதா சென், “நண்பர்களாக தொடங்கினோம். நண்பர்களாக இருப்போம். எப்போதும் நம்முடைய அன்பு தொடரும். ஆனால் நீண்ட நாள் உறவு முடிந்தது!” என்று சுஷ்மிதா சென் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு மிகப்பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் அவருடைய ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
பிரேக் அப்க்கு பிறகு முதல் பதிவு:
இந்த பிரேக் அப் அறிவிப்பை தொடர்ந்து நடிகை சுஷ்மிதா சென், தம்முடைய இன்ஸ்டாகிராமில், “அமைதிதான் அழகு.. எல்லாவற்றுக்கும் அப்பால் I love you guys!” என்று பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து சுஷ்மிதாவின் இந்த பதிவுக்கு அவருடைய ரசிகர்களும் நண்பர்களும் தங்களுடைய தேற்றுதல்களையும், நேசக்கரங்களையும் நீட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Radhika Apte | Latest trending: The Black & White Challenge by Actresses - You know you don't wanna miss this! - Slideshow
- Radhika Apte | Sizzling hot beach pics of Indian Actresses - Slideshow
- Radhika Apte | TOP 10 PHOTOS OF THE WEEK (AUG 15 - AUG 21) - Slideshow
- Radhika Apte | Top 10 photos of the week (July 3 - July 9) - Slideshow
- Radhika Apte - Photos
- Kalam - Photos
- Indian Princess 2014 - Photos
- Sushmita Sen Opens Ambika Pillais Salon - Photos
- Rohit Verma Fashion Show - Photos
- Sushmita Sen Launches Naturals Unisex Salon - Photos
- I AM She 2011 Grand Finale - Photos
- Sushmita Sen | Film personalities who paid homage to Sridevi - Slideshow