www.garudabazaar.com

"Blue Saree'ல ஒரே ஒரு லுக் தான்.. மொத்த 'Trending'கும் க்ளோஸ்.." இணையத்தை ஆக்கிரமித்த த்ரிஷாவின் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஆண்டில் அடுத்து ரிலீஸ் ஆகவுள்ள தமிழ் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம், "பொன்னியின் செல்வன்".

actress trisha new look in blue saree gone viral

புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில், இரண்டு பாகங்களாக திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த வரலாற்று படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

அதே போல, பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் முதல் சிங்கிளும், வரும் ஜூலை 31 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதே போல, பொன்னியின் செல்வன் நாவலில் அதிக பிரபலமான குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

actress trisha new look in blue saree gone viral

இந்நிலையில், நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான திரைப்படங்கள் நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை திரிஷா. சிறிய இடைவேளையில், தற்போது அவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும்.

actress trisha new look in blue saree gone viral

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும் பேராவலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்தியில், நடிகை திரிஷா, 'தி ரோடு' என்னும் படப்பிடிப்பின் போது, புடவையில் ஜொலிக்கும் BTS புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

actress trisha new look in blue saree gone viral

நீல நிற புடவையில், நடிகை திரிஷா ஜொலிக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை அள்ளி பறக்க விட்டு வருகின்றனர். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், அழகில் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே ஜொலிக்கும் நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

actress trisha new look in blue saree gone viral

People looking for online information on New Look, Trisha, Viral photo will find this news story useful.