www.garudabazaar.com

''நான் உறுப்படியா பண்ண ஒரே விஷயம்..!' - பிரபல நடிகை வெளியிட்ட ஸ்கூல் டைம் போட்டோ செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தனது ஸ்கூல் டைம் புகைப்படத்தை பகிர்ந்து அதுகுறித்த நினைவுகளை பதிவிட்டுள்ளார். 

நடிகை டாப்ஸி வெளியிட்ட ஸ்கூல் டைம் போட்டோ | actress tapsee pannu shares her school time photo and goes viral

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் டாப்ஸி. இதையடுத்து இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். தற்போது டாப்ஸி பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருகிறார். அண்மையில் இவர் நடித்த பத்லா, தப்பட் உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 

நடிகை டாப்ஸி வெளியிட்ட ஸ்கூல் டைம் போட்டோ | actress tapsee pannu shares her school time photo and goes viral

இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பள்ளிக்கூடத்தில் தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், அதுகுறித்த சூப்பர் நினைவுகளை பகிர்ந்துள்ளார். 12-வது படிக்கும் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், பற்களில் க்ளிப், சுருட்டை முடி, ஓவர் வெயிட் என இருந்ததாகவும், அப்போது டாப்ஸி செய்த ஒரே நல்ல விஷயம் கோட்டில் காணப்படும் அந்த பேட்ஜை பெற்றதுதான் என பதிவிட்டுள்ளார். டாப்ஸி வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

நடிகை டாப்ஸி வெளியிட்ட ஸ்கூல் டைம் போட்டோ | actress tapsee pannu shares her school time photo and goes viral

People looking for online information on School Photo, Tapsee pannu, Viral will find this news story useful.