''எனது வெளிச்சமாக இருந்ததற்கு..'' - தனது முதல் ஹீரோவுக்கு ஃபோன் அடித்த சமந்தா..! இதுதான் விஷயம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா தனது முதல் படத்தில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவீந்திரனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தனது முதல் ஹீரோவுக்கு ஃபோன் அடித்த சமந்தா | actress samantha wishes her first hero rahul ravindran on his birthday

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். 

இந்நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஒருவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தவர் ராகுல் ரவீந்திரன். தமிழில் வின்மீண்கள், சூரியநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை சமந்தா, ''எனது வெளிச்சமாக இருந்ததற்கு நன்றி. உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு நீ கொடுக்கும் பாசிட்டிவிட்டி, எல்லோரிடத்திலும் கிடைக்காது. உன்னை எப்போதுமே என் இனிய நண்பர் என பெருமையாக கூறுவேன்'' என சமந்தா பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து சமந்தாவின் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் ரவீந்திரன், ''இன்று காலை எழுந்தவுடன், உனது மிஸ்டு காலையும், இந்த ட்வீட்டையும் தான் பார்க்கிறேன். என்னை ரொம்பவே எமோஷனல் ஆக்குகிறாய்'' என பதிவிட்டுள்ளார். 

 

தனது முதல் ஹீரோவுக்கு ஃபோன் அடித்த சமந்தா | actress samantha wishes her first hero rahul ravindran on his birthday

People looking for online information on Moscowin Kavery, Rahul Ravindran, Samantha ruth prabhu will find this news story useful.