www.garudabazaar.com

“எனக்குள்ள இருக்குற குழந்த ஆட்டம் போடுது”…. fangirl ஆன ’நானே வருவேன்’ நடிகை – viral pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானே வருவேன் படத்தில் நடித்துள்ளது பற்றி நடிகை இந்துஜா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Actress induja Ravichandran shared pic with selvaraghavan

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி…

தனுஷ் நடித்த 'அசுரன்', 'கர்ணன்' ஆகிய படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு, நானே வருவேன் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் மயக்கம் என்ன திரைப்படத்துக்குப் பிறகு தனுஷும் செல்வராகவனும் இணைந்துள்ளனர். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். இதில், தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார். மேலும் ஸ்விடீஷ் நடிகையான எல்லி அவ்ரம் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Actress induja Ravichandran shared pic with selvaraghavan

படப்பிடிப்பு நிறைவு…

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் மூலம் அறிய முடிந்தது. இரண்டு வெவ்வேறு தோற்றங்களில், தாடி மீசையுடன் மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு தனுசும், தாடி இல்லாமல் ஒரு தனுசும் போஸ்டரில் காட்சி அளித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

Actress induja Ravichandran shared pic with selvaraghavan

இந்துஜாவின் fangirl moment….

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் இந்துஜா ரவிச்சந்திரன் தற்போது இயக்குனர் செல்வராகவனோடு இருக்கும் புகைப்படத்தை பகிர அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தோடு  “எனக்குள்ள இருக்குற குழந்தை ஒவ்வொரு முறையும் நான் செல்வராகவனோடு பணிபுரிந்ததை நினைக்கும்போதெல்லாம் ஆட்டம் போடுது. இந்த அனுபவத்தைக் கொடுத்ததுக்கு நன்றி சார். எப்போதும் மரியாதை” எனக் கூறியுள்ளார். இந்துஜா இதற்கு முன்னர் நடித்த மேயாத மான் மற்றும் மகாமுனி ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறமைக்காக பாராட்டப்பட்டவர். இப்போது முன்னணி இயக்குனர் படத்தில் நடிப்பதால் அவருக்கு இந்த படம் பேசப்படும் ஒரு படமாக அமையும் என நம்பலாம்.

Actress induja Ravichandran shared pic with selvaraghavan

தொடர்புடைய இணைப்புகள்

Actress induja Ravichandran shared pic with selvaraghavan

People looking for online information on Dhanush, Induja ravichandran, Naane varuvean, Selvaraghavan will find this news story useful.