கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகை ராதிகா ஆப்தே? - அவர் என்ன சொல்றார் பாருங்க
முகப்பு > சினிமா செய்திகள்உலக அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக பாதிப்புக்குள்ளானவர்கள் கொண்ட நாடாக உள்ள அமெரிக்க வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. படப்பிடிப்புகள், வணிகம் சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் இந்தியாவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிரபலங்கள் குவாரண்டின் நேரத்தில் தங்களது செயல்பாடுகள் குறித்து வெளியிடும் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகை ராதிகா ஆப்தே மாஸ்க் அணிந்த படி இருக்கும் புகைப்படம் சில நாட்களாக வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''மருத்துவமனை விசிட். கொரோனா வைரஸ் இல்லை. கவலைப்படத் தேவையில்லை. பாதுகாப்பாக இருக்கிறேன். கர்ப்பமாக இருக்கும் எனது தோழிக்குத் துணையாக மருத்துவமனைக்குச் சென்றேன்'' என்று விளக்கமளித்துள்ளார்.