www.garudabazaar.com

'நந்திதா ஸ்வேதா' வை பார்த்து அப்படி சொன்ன ரசிகர்.. கொஞ்சமும் யோசிக்காமல் கொடுத்த தரமான பதிலடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா குறித்து ரசிகர் கூறிய கருத்துக்கு நடிகை நந்திதா ஸ்வேதா பதிலடி கொடுத்துள்ளார்.

Actress Nandita Swetha Reacts Body Shaming Comment

மலை உடைப்பு , ஆற்று மணல் கொள்ளையை விஜய் என்னைக்காவது கண்டிச்சுருக்காரா? சீமான் கேள்வி

தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, உப்புக்கருவாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து இருந்தார்.

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது வழக்கம். நடிகைகள் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார்கள். இணையவாசிகள் இவர்களை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் வேளையில், மற்றவர்கள் எல்லை தாண்டி சென்று நடிகைகளின் உடலமைப்பை வைத்து பாடி ஷேமிங்கில் ஈடுபடுகின்றனர். இதை, சில நடிகைகள் கவனிக்காமல் விட்டுவிடுவர். சிலர் கடுமையாக எதிர்வினையாற்றி விடுகின்றனர்.

 

Actress Nandita Swetha Reacts Body Shaming Comment

நந்திதா ஷேர் செய்த புகைப்படத்தில் அவரது உடலமைப்பு குறித்து ஷேமிங் செய்து நெட்டிசன் ஒருவர் பதிந்த பின்னூட்டத்திற்கு நடிகை நந்திதா கோபமடைந்துள்ளார். அதில் அந்த ரசிகர் "தயவு செய்து உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் வடிவங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆண்ட்டி போல் இருக்கீங்க. ஒழுங்கா ஒர்க் அவுட்கள் செய்ங்க" என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

THALAPATHY66 : தமிழ் தெலுங்கில் விஜய் நடிக்கும் புதிய படம்! ஷூட்டிங் எப்போ? எந்த GENRE தெரியுமா?

Actress Nandita Swetha Reacts Body Shaming Comment

இதைப் பகிர்ந்து நடிகை நந்திதா மேற்கொண்டு கருத்து தெரிவித்தார்.  அதில், ‘இப்படிப்பட்டவர்களால் நரகத்தில் இருப்பது போல இருக்கிறது. நான் ஒன்றும் பெண் கடவுள் இல்லை.. நானும் ஒரு சாதாரண மனுஷி தான். எல்லோரையும் போல நானும் கஷ்டப்படுகிறேன்.. எப்படி இப்படி வார்த்தைகளை பேச முடிகிறது.. நான் என் உடலை நேசிக்கிறேன்.. நான் இப்போது இருக்கும் விதம், நான் தோன்றும் விதம் எனக்கு பிடிக்கிறது' என கூறியுள்ளார்.

Actress Nandita Swetha Reacts Body Shaming Comment

Actress Nandita Swetha Reacts Body Shaming Comment

People looking for online information on Actress Nandita Swetha, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நந்திதா ஸ்வேதா, Body Shaming will find this news story useful.