"91 ஹீரோயின்ஸ்".. "150+ படங்கள்".. டப்பிங் ஆர்டிஸ்டாக 10 வருடம் நிறைவு!!.. நடிகை ரவீனா நெகிழ்ச்சி.!
முகப்பு > சினிமா செய்திகள்இந்திய மொழிகளில் பல முன்னணி திரைப்படங்களில் நாயகிகளுக்கு டப்பிங் கொடுத்த இளம் குரல் கலைஞரும், ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவருமான ரவீனா ரவி திரைத்துறைக்கு வந்து டப்பிங் கலைஞராக 10 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.
அவருடைய திரைப்பயணத்தின் இந்த மைல் ஸ்டோன் குறித்து ரவீனா ரவி மனம் திறந்துள்ளார். அதன்படி, 2022 செப்டம்பர் முதல் பின்னணி குரல் கலைஞராக 10 வருடத்தை நிறைவு செய்துள்ள ரவீனா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா ஹிந்தி உள்பட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார். இதற்காக தன்னுடன் பணிபுரிந்தவர்கள், ஆதரவு காட்டியவர்கள், தன்னுடைய பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக தன்னுடைய அனைத்து பணிகளையும் அருகில் இருந்து ஊக்குவித்த தன்னுடைய தந்தையை இந்த நேரத்தில், தான் மிஸ் பண்ணுவதாகவும் தன்னுடைய இந்த வளர்ச்சி பார்ப்பதற்கு அவர் இப்போது இல்லை, அவர் எப்போதும் தன்னுடைய வளர்ச்சி பார்த்து பெருமிதம் கொள்வார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல் தன்னுடைய குருநாதராக தம்முடைய தாயாரை குறிப்பிட்ட ரவீனா, தம்முடைய தாயார் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக 45 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து, 5 மாநில விருதுகளை வாங்கியது பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை இந்த ரெக்கார்டுகளை யாரும் பிரேக் செய்ததில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ரவீனா, தாயார் வழியிலேயே செல்வது குறித்தும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். மேலும் தம்முடைய தந்தை ரவீந்திரநாதன் - தாயார் ஸ்ரீஜா ரவி இருவரும் தன்னுடைய உயிர் மற்றும் உலகம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுவரை புதிய மற்றும் லெஜென்டரி இயக்குனர்கள் என 104 இயக்குனர்களுடன் பணி புரிந்ததாக குறிப்பிட்டு இருக்கும் ரவீனா ரவி, தம்முடைய டப்பிங் நேரங்களில் துணைபுரிந்த உதவி இயக்குனர்களுக்கும் தம்முடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார். மேலும் ஆயிரம் ஆயிரம் கலைஞர்களையும் நடிகர்களையும் திரைப்படங்களை தயாரிப்பதன் வாயிலாக வாழ வைக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்து ரவீனா ரவி, வெள்ளி திரையில் இதுவரை ஜொலிக்கும் 91 நாயகிகளுக்கு டப்பிங் பேசியதாகவும், அவர்களுடைய நடிப்பனுபவத்தை உள்வாங்கி பேசியது மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அத்துடன் டப்பிங் பேசும் பொழுது அந்த கேரக்டரை சரியாக மேட்ச் செய்வதுடன், தன்னாலான மெருகேற்றத்தை செய்ததும் குறித்தும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தொடர்ந்து தம்முடைய சவுண்ட் இன்ஜினியர்ஸ், தொழில்நுட்பக் கலைஞர்கள், மிகவும் பொறுமையாகவும் டப்பிங்கின் போது பணீரிதியாக எதார்த்தமாக ஏற்படும் ‘ரோல் ஆகும் தருணங்களை’ சகித்துக் கொண்டும், இனிமையுடன் பணிபுரிந்து மிக்சிங், ஒலிக்கலவை செய்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலரையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது என்பது முழுமையாகாது என்று குறிப்பிட்டு இருக்கும் ரவீனா, தனக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்த டப்பிங் யூனியனுக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார். மேலும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ரவீனா, சக டப்பிங் கலைஞர்கள், சூப்பர் ஹீரோக்களுடன் பணிபுரிந்த மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தம்முடைய பணிகள் குறித்து சிலாகிக்கும் ரசிகர்கள் உட்பட கருத்துக்களை பகிர்ந்தும், ஊக்குவித்தும், சில நேரங்களில் விமர்சித்தும் வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்த ரவீனா, டப்பிங் என்பது உயிரோட்டமான ஒரு தொழில் என்றும் இதற்கு, தான் ஆசீர்வதிக்கப்பட்டதற்காக கடவுளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார். ரசிகர்களின் பேராதரவுடனும் அன்புடனும் 10 வருடம் தொடர்ச்சியாக இந்த துறையில் தன்னால் நீடிக்க முடிகிறது என்றால் தன்னைப் போலவே அனைவராலும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் இருந்து தத்தம் துறைகளில் ஜொலிக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dubbing Artist And Actress Raveena Ravi Tweeted Her Old Picture.
- Raveena Ravi Unites With Ayogya Director Venkat Mohan After Kaththi
- Raveena Ravi About Director Venkat Mohan In Vijay's Kaththi And Vishal's Ayogya
- Raveena Ravi Tweets About Her Experience Working In 2 Point 0
- Raveena Ravi Talks About Dubbing For Madonna Sebastian In Dhanush's Power Paandi
- Raveena Ravi To Dub For Amy Jackson In 2.0
- Dubbing Artiste Raveena Ravi Opens Up About Her Film Career