www.garudabazaar.com

பிரபல ஹீரோவின் கல்யாணத்துக்கு ஃபோட்டோ பகிர்ந்து வாழ்த்து சொன்ன விஷ்ணு விஷால்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராணா மற்றும் மிஹீகாவின் திருமணம் கடந்த சனிக்கிழமை (08/08/2020) குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. திருமணத்தில் அவரின் உறவினரான நாக சைதன்யா தனது மனைவி சமந்தாவுடன் கலந்து கொண்டார்.

Actor Vishnu Vishal congratulates Rana Daggubati for his marriage | ராணாவின் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் வாழ்த்து

மேலும், ராம்சரண் உள்ளிட்ட சில பிரபலங்களே கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்கள் ராணாவிற்கு வீட்டில் இருந்தபடியே திருமண வாழ்த்துகள் தெரிவித்தனர். ராணாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

Actor Vishnu Vishal congratulates Rana Daggubati for his marriage | ராணாவின் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் வாழ்த்து

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ராணாவின் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, ''சில வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் கல்யாணமே பண்ணிக்கமாட்டேன்னு சொன்னாரு. அவரு இந்த அழகான புகைப்படத்தில் இருக்காரு. திருமண நாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த ராணா,  சில வருஷங்கள் கடந்து விட்டது'' என்று கமெண்ட் செய்துள்ளார்.

Actor Vishnu Vishal congratulates Rana Daggubati for his marriage | ராணாவின் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் வாழ்த்து

Actor Vishnu Vishal congratulates Rana Daggubati for his marriage | ராணாவின் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் வாழ்த்து

People looking for online information on Rana Daggubati, Vishnu Vishal will find this news story useful.