தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விஷ்ணு மஞ்சு 4வது குழந்தைக்கு அப்பாவாகியுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகரான மோகன்பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘குறள் 388’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2009ம் ஆண்டு விரானிக்கா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2011ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆண் குழந்தையும் பிறந்தது.
தற்போது மீண்டும் விரானிக்கா கர்ப்பமாக இருப்பதாக, 4வது குழந்தையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பான அவரது ட்வீட்டில், வினியின் சொந்த ஊரில் பிடித்த இடத்தில் இருந்து முக்கியமான அறிவிப்பை கூறுகிறேன். அரி, விவி, அவ்ரம் ஆகியோரை தொடர்ந்து 4வது குட்டி தேவதையை எதிர்ப்பார்க்கிறோம்’ என ட்வீட் செய்துள்ளார்.
விஷ்ணு மஞ்சு, வினி தம்பதியினருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
A special announcement from a special location. From Vini’s home town and favourite place, we are delighted to announce that Ari, Vivi, and Avram are now going to be joined by a fourth little angel! pic.twitter.com/NIXMEP1GMP
— Vishnu Manchu (@iVishnuManchu) May 2, 2019