Beast Others
www.garudabazaar.com

மாஸ்டர் J D பாட்டுக்கு குழந்தைகளோடு ஆடிய ’பீஸ்ட்’ வீரராகவன்… வைரலாகும் ‘பீஸ்ட்’ BTS வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தைகளோடு வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடிய வீரராகவன்….  வைரலாகும் ‘பீஸ்ட்’ BTS க்யூட் வீடியோ!

Actor vijay danced for vathi coming song in beast shooting spot

Also Read | முதல் முறையாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வலிமை' திரைப்படம்.. எப்போ? எதுல?

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பீஸ்ட் ரிலீஸ்…

விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படம் நேற்று முன் தினம் ஏப்ரல் 13 அம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக பீஸ்ட் இருந்ததால் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி படத்தைப் பார்த்தனர். தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகள் வரை இந்த திரைப்படம் வெளியானது.

பீஸ்ட் ரிலீஸும் வரவேற்பும்…

Actor vijay danced for vathi coming song in beast shooting spot

படத்தில் விஜய் வீரராகவன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரோடு பூஜா ஹெக்டே ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  இவர்களோடு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். அவர் நடிப்பில் முதலில் வெளியாகும் படமாக பீஸ்ட் அமைந்துள்ளது. நெல்சனின் முந்தைய படங்களைப் போல நகைச்சுவை படமாக இல்லாமல் பீஸ்ட் திரைப்படம் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப் பட்டிருந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால் முதல் நாள் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரலாகும் வாத்தி கம்மிங் வீடியோ….

Actor vijay danced for vathi coming song in beast shooting spot

இந்நிலையில் தற்போது இணையத்தில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இரு குழந்தைகளோடு விஜய் நடனமாடும் க்யூட்டான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மாஸ்டர் பட வெளியீட்டின் போது வாத்தி கம்மிங் பாடலும் அதில் விஜய்யின் நடன அசைவுகளும் வெகுவாகக் கவனம் பெற்றன. பல சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் விஜய்யின் நடன அசைவுகளை இமிடேட் செய்து வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | பீஸ்ட் ஓடும்போது திடீர்னு 'RRR'.. விஜய்க்கு பதில் ராம்சரண்.. ஆபரேட்டரே 'Confuse' ஆயிட்டாரு..

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor vijay danced for vathi coming song in beast shooting spot

People looking for online information on Beast Movie, Beast shooting, Master Movie, Thalapathy Vijay, Vathi Coming Song, Vijay, Vijay dance vathi coming song will find this news story useful.