Shocking: பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்களின் மறைவு குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி மக்களை கலக்கமடையச் செய்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலினால் அவதிப்படும் நிலையில் இந்த செய்திகள் மேலும் துன்பத்தை தருகின்றன.

இந்நிலையில் நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று (10/09/2020) காலை சிகிச்சைப் பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 45. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
நடிகர் விஜய் டிவியில் 'அது இது எது', 'கலக்கப்போவது யாரு' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைத்தவர் இன்று நம்மை கண்ணீர் விட வைத்து விட்டார்.
வடிவேலு பாணியில் அவர் செய்யும் சேஷ்டைகள் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பெரும்பாலான விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது ரியாக்ஷன்களாலேயே நம்மை சிரிக்க வைத்துவிடுவார். அவரது மறைவுக்கு Behindwoods சார்பாக இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.
SHOCKING: பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள் வீடியோ