www.garudabazaar.com

நடிகர் சுஷாந்த் மரணம்.. சமையல்காரரின் பரபரப்பு தகவல்.! - 'அன்று நடந்தது என்ன.?'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு அவரது வீட்டு சமையல்காரர் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுஷாந்தின் சமையல்காரர் பரபரப்பு தகவல் | Actor Sushant Singh's Cook opens on the day before his suicide

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இது ஒருப்பக்கம் இருக்க, சுஷாந்தின் மரணத்தில் அவரது காதலியான நடிகை ரியா சக்ராபொர்த்திக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. 

சுஷாந்தின் சமையல்காரர் பரபரப்பு தகவல் | Actor Sushant Singh's Cook opens on the day before his suicide

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு சமையல்காரராக இருந்த அசோக் தெரிவித்துள்ள கருத்தில், ''நான் அவரிடம் இருந்த போது, அவர் சந்தோஷமான மனிதராக இருந்தார். அவர் எந்த மன அழுத்தத்திலும் இல்லை. எந்த மருந்துகளும் எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல அப்போது அவருக்கும் ரியாவுக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை. அனைத்தும் சகஜமாகவே இருந்தது'' என அவர் தெரிவித்தார். 

மேலும் சுஷாந்த தற்கொலை செய்து கொண்ட நாளில் வேலை பார்த்த சமையல்காரர் நீரஜ் தெரிவித்துள்ள கருத்தில், ''இறப்பதற்கு முந்தைய நாள் இரவு, இரவு சாப்பிட என வேண்டும் என கேட்டோம், அவர் மேங்கோ ஷேக் போது என கூறினார். பிறகு காலை உணவை கேட்ட போது, ஆரஞ்ச் ஜூஸ், இளநீர், வாழைப்பழம் போது என தெரிவித்தார். ஆனால் அவர் ஆரஞ்ச் ஜூஸ், மற்றும் இளநீரை மட்டுமே எடுத்து கொண்டார். பிறகு மதிய உணவை பற்றி கேட்க கதை தட்டியபோது, கதவு திறக்கவில்லை, பிறகு திறந்து பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டு, இயற்கை எய்தியிருந்தார்'' என தெரிவித்தார். 

மேலும் அவர், ''எப்போது ரியா மற்றும் சுஷாந்த் சந்தோஷமாகவே இருந்தார்கள். ஆனால், அவர்களின் ஐரோப்பா சுற்றுலாவுக்கு பிறகுதான் சுஷாந்த் நார்மலாக இல்லை'' எனவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். 

நடிகர் சுஷாந்த் மரணம்.. சமையல்காரரின் பரபரப்பு தகவல்.! - 'அன்று நடந்தது என்ன.?' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்தின் சமையல்காரர் பரபரப்பு தகவல் | Actor Sushant Singh's Cook opens on the day before his suicide

People looking for online information on Rhea Chakraborty, Sushant Cook, Sushant Murder, Sushant Singh Rajput will find this news story useful.