www.garudabazaar.com

''அந்த விஷயத்திற்கு பிறகு., என் சினிமா கேரியர்..!'' - நடிகர் பப்ளு பிருத்விராஜ் எமோஷனல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் பப்ளு பிருத்விராஜ் தனது சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். 

தனது சினிமா பயணம் பற்றி பப்ளு ப்ரித்விராஜ் | Actor Babloo Prithiveeraj opens on his cinema life, ajith, vijay and many

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் பப்ளு என்கிற பிருத்விராஜ். வானமே எல்லை, புதிய மன்னர்கள், ராமன் அப்துல்லா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், அஜித்தின் அவள் வருவாளா படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இத்திரைப்படத்தில் இவரது வில்லன் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதன் பிறகு படங்களில் நடிப்பதில் சின்ன இடைவேளிவிட்ட பிருத்விராஜ், ராதாமோகன் இயக்கிய பயணம் படத்தில் மீண்டும் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தார். 

இந்நிலையில் நடிகர் பப்ளு பிருத்விராஜ் நம்மிடம் அவரது சினிமா வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ''அவள் வருவாளா படத்திற்கு பிறகு பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது எனது 3 வயது மகனுக்கு ஆட்டிசம் நோய் இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு, எனது வாழ்க்கையே பெரும் மன அழுத்தத்தில் சிக்கி கொண்டது. இத்தனை படம் நடித்து, எதற்காக பெயர் வாங்க போகிறோம் என்ற எண்ணம் உருவானது. அவனது மருத்துவத்திற்காக பல நாடுகளுக்கு சென்றேன். ஆனால், அதை ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, இது எவ்வளவு அழகான வாழ்க்கை என்பது. எனக்கு இந்த வாய்ப்புகளை தவறவிட்டதில் வருத்தமேதுமில்லை'' என அவர் எமோஷனலாக கூறினார். 

மேலும் தான் நடித்த காலத்தில் சினிமா பயணத்தை தொடங்கிய அஜித் மற்றும் விஜய் குறித்தும், அவர்களின் சூப்பர்ஸ்டார் இமேஜ் எப்படி சாத்தியமானது என்பது குறித்தும் அவர் பல விஷயங்களை தெரிவித்தார். மேலும் நடிகர் அஜித் பற்றியும், அவருடன் தனக்கிருந்து நட்பு பற்றியும், இன்னும் பல விஷயங்களையும் நடிகர் பப்ளு பிருத்விராஜ் பேசிய முழு வீடியோ இதோ.., 

 

''அந்த விஷயத்திற்கு பிறகு., என் சினிமா கேரியர்..!'' - நடிகர் பப்ளு பிருத்விராஜ் எமோஷனல். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

தனது சினிமா பயணம் பற்றி பப்ளு ப்ரித்விராஜ் | Actor Babloo Prithiveeraj opens on his cinema life, ajith, vijay and many

People looking for online information on Ajith Kumar, Aval Varuvala, Babloo Prithveeraj, Vijay will find this news story useful.