www.garudabazaar.com

பாலா - சூர்யா படத்துக்காக தமிழுக்கு வரும் பிரபல ஹீரோயின்? ஃபேன்ஸ கைல புடிக்க முடியாதே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதாநாயகி பற்றிய முக்கியமான அப்டேட் தெரியவந்துள்ளது.

keerthi shetty to debut in tamil through surya movie

கைதி தீம் மியூசிக்.. கிரிக்கெட் விளையாடும் லோகேஷ்… செம்மயா பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர்!

சூர்யாவும் பாலாவும்

திரையுலகில் சூர்யாவுக்கு திருப்புமுனைப் படமாக அமைந்த படம் நந்தா. விக்ரம் நடித்த சேது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர், இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தில் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா. அது ரசிகர்களிடம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. நந்தாவுக்குப் பிறகு பாலா சூர்யா - விக்ரமை வைத்து இயக்கிய படம் பிதாமகன். நந்தாவுக்கு நேர் எதிரான நகைச்சுவை ததும்பும் பாத்திரத்தில் இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்து அவரின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்கொண்டு வந்தார் பாலா.

குறிப்பாக சூர்யா, ரயில் புடவை விற்கும் காட்சி மற்றும் லைலாவோடு லங்கர் கட்டை உருட்டும் காட்சி எல்லாம் இன்றளவும் பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. அதன் பின்னர் பாலா தயாரிப்பில்  சிங்கம்புலி இயக்கத்தில் மாயாவி படத்தில் நடித்தார் சூர்யா. இடையில் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நான்காவது முறையாக பாலா சூர்யா கூட்டணி இப்போது புதிய படத்தில் இணைய உள்ளது.

keerthi shetty to debut in tamil through surya movie

பாலாவின் நாச்சியார்

இயக்குநர் பாலா இயக்கத்தில் கடைசியாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்தன.

keerthi shetty to debut in tamil through surya movie

பாலா படத்தின் கதாநாயகி

இந்நிலையில் சூர்யா பாலா இணையும் இந்த படத்தின் கதாநாயகி பற்றிய முக்கியமான அப்டேட் ஒன்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக உப்பென்னா என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமான கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அப்படி அவர் நடிக்கும் பட்சத்தில் தமிழில் அவரின் அறிமுகப்படமாக இந்த படம் அமையும்.  இயக்குனர் பாலாவின் எல்லா படங்களிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பதால் கீர்த்தி ஷெட்டிக்கு தமிழில் அறிமுகமாகும் முதல் படமே முக்கியமான படமாக அமையும் என நம்பலாம்.

“Workmode on” … ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்த நடிகர்- அடுத்த படக் கூட்டணியா?

தொடர்புடைய இணைப்புகள்

keerthi shetty to debut in tamil through surya movie

People looking for online information on கீர்த்தி ஷெட்டி, சூர்யா, பாலா, Director Bala, Keerthi shetty, Surya Movie will find this news story useful.