நீட் தேர்வு... நடிகர் சூர்யா கடும் கண்டனம் - "மாணவர்களின் மரணங்களை வேடிக்கை பார்ப்பதா...??"
முகப்பு > சினிமா செய்திகள்நீட் தேர்வை கடுமையாக கண்டித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "நீட் தேர்வு' பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு'வாழ்த்து' சொல்வதற்கு பதிலாக 'ஆறுதல்' சொல்வதை போல அவலம் எதுவுமில்லை.கொரானா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுத தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருஒறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரானா அச்சத்தால் உயிருக்கு பயந்து "வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத (வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
'தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை' என்ற செய்து, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுஒறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுப்பிடிக்கும் சாணக்கியர்கள், 'அனல் பறக்க' விவாதிப்பார்கள்.
நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீஇயான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்இற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்ககூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.
மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன். ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை "பலியிட' நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கறார்கள்.
ஒரே நாளில் 'நீட் தேர்வு' மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் வைக்கற "நீட் தேர்வுக்கு' எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு... நடிகர் சூர்யா கடும் கண்டனம் - "மாணவர்களின் மரணங்களை வேடிக்கை பார்ப்பதா...??" வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dhanush And Suriya Co-actor Famous For His Roles Passes Away, RIP Jaya Prakash Reddy
- நடிகர் சூர்யாவின் நலத்திட்ட உதவி | Actor Suriya Donates 5 Crores From Soorarai Pottru Sales
- சூர்யா செய்த நலத்திட்ட உதவி | Actor Suriya Donation Before Soorarai Pottru Ott Release
- Actor Suriya Takes The First Giant Step From Soorarai Pottru Revenue, Pics Go Viral
- சூரரை போற்று முதல் ரிவ்யூவ் | Suriya's Soorarai Pottru Gets First Review From Director
- Director Bharathiraja’s First Review Of Suriya’s Soorarai Pottru Out
- சூர்யாவுக்கு ஹரி கடிதம் | Director Hari Pens A Letter To Suriya On Soorarai Pottru Ott Release
- Director Hari’s Latest Statement On Suriya’s OTT Release Move
- சூர்யாவுக்கு ஆதரவாக பேசும் எஸ்.ஆர்.பிரபு | Producer SR Prabhu Opens On Suriya's Soorarai Pottru Ott Release
- After Suriya's Soorarai Pottru, Vijay's Master OTT Release News Causes Confusion
- Suriya's Soorarai Pottru OTT Release, Here’s How The Theater Owners Reacted
- Suriya And GV Prakash Kumar's Soorarai Pottru To Directly Release On Amazon Prime Video | அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் சூர்யாவின் சூரரைப் போற
தொடர்புடைய இணைப்புகள்
- எல்லாத்தையும் கொடுத்துட்டு தமிழன் சும்மா இருக்க முடியுமா ? கொந்தளித்த Doctor எழிலன் | NEET 2020
- Open Challenge, Prove பண்ணா மொட்ட அடிச்சுக்குறேன்! - George Exclusive Interview
- நான் மொக்கையா நடிச்சேன் , எல்லா படமும் Flop - Unbelievably Frank Interview Ever | Shrutika Arjun
- "நெறய Directors-ஓட Career-அ நான் Finish பண்ணிருக்கேன்!" - Suriya's Heroine Shrutika Breaks!
- எங்களோட Teacher இவங்க தான், Kamal, Rahman, Madhavan, Lawrence, Karthi, Nivin, Mahesh Babu, Vivek, DD
- 23 Years Of Suriyaism - Live Tribute To Suriya! Cover Song Version By Deepa
- Anirudh இல்லனா நான்..🤣🤣 அய்யயோ, கேவலமான Punch தோணுது! - Vignesh Shivan's Best Candid Interview!
- Soorarai Pottru படத்த Theatre Owners நம்பி இருந்தோம்! - Ram Muthuram Theatre Owner ஆதங்கம்!
- "Suriya-வ நம்பி யாரும் Theatre கட்டல!" - Theatre Association Secretary Srither ஆவேசப் பேட்டி
- Producer-அ இவ்ளோ கடுமையா தடுக்கக் கூடாது! - Producer Inder Kumar ஆதரவு பேட்டி!
- Suriya Sir.."உங்கள இவ்ளோ பெரிய Star ஆக்குன Audience-அ இழந்துராதீங்க!" - Ravindran Red Hot Interview!
- OTT-ல Soorarai Pottru Release பண்றதுக்கு Distributors கோவப்பட்டா...- Manobala அதிரடி பேட்டி!