RRR Others USA
www.garudabazaar.com

'சிவாஜி சார் வீட்ட சுத்தி போர்வை போத்திக்கிட்டு நடுசாமத்துல ஒருத்தன்'.. சுகுமார் சொன்ன கதை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சரண் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், பிரபு, சினேகா, நாகேஷ், பிரகாஷ் ராஜ்,  ஜெயசூர்யா  என பலர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் வசூல் ராஜா MBBS.

Actor Sukumar Fb Post about Sivaji Ganesan & Prabhu Ganesan

வசூல் ராஜா MBBS

Actor Sukumar Fb Post about Sivaji Ganesan & Prabhu Ganesan

இந்த படம் கிரேசி மோகன் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படங்களில் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களுள் முக்கியமானது. இந்தியில் 2003ம் ஆண்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சஞ்சய் தத் நடித்த Munna Bhai MBBS  படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவானது. இந்த படத்திலும், கமல்ஹாசன் நடித்த விருமாண்டி, பரத் நடித்த காதல் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் சுகுமார்.

Actor Sukumar Fb Post about Sivaji Ganesan & Prabhu Ganesan

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

இன்று நடிகர் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு முகநூலி பிறந்தநாள் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், "வசூல்ராஜாவுல நடிச்சப்போ பிரபு சார் அவ்ளோ நெருக்கம் என்கிட்ட பிரேக் கிடைக்கிறப்போல்லாம் கூப்ட்டு கதை பேசுவாரு. கண்டிப்பா லன்ச் அவர் கூடத்தான் இருக்கும். நான் எப்பவுமே கம்மியா சாப்டுவேன்.திட்டுவாரு."சுக்கு எவ்ளோ சம்பாதிச்சாலும் ஒரு மனுசனுக்கு சாப்ட்டது மட்டும்தான் மிச்சம்" அப்டீம்பாரு.

Actor Sukumar Fb Post about Sivaji Ganesan & Prabhu Ganesan

"அண்ணே அப்பாக்கிட்ட கத்துக்கிட்டது என்னனு சொல்லுங்க அப்டீன்னு கேட்டேன்..

"நெறய இருக்கு"... ஒருநாள் யாரோ சிவாஜி சார் வீட்ட சுத்தி போர்வை போர்த்திக்கிட்டு நடுசாமத்துல இருந்து ஒருத்தன் சுத்திட்டு  இருக்கான் கண்டிப்பா திருடனாத்தான் இருக்கும்னு பக்கத்து வீட்ல இருக்கவங்கக்கிட்ட இருந்து போன் வந்துச்சாம்.. உடனே லைட்லாம் ஆன் பண்ணிட்டு கட்டையெல்லாம் எடுத்துகிட்டு ஓடிப்போய் புடிச்சிப் பார்த்தா அது சிவாஜி சார்!!! .."என்னப்பா ராத்திரில இப்பிடி சுத்திட்டு இருக்கீங்க?"

இளைய திலகம் பிரபு

"அதுவா நாளைக்கு ஒரு சீன்ல செத்துப்போற மாதிரி ஒரு நடிக்கணும் .. விடிய விடிய கண்ணு முழிச்சா முகத்துல ஒரு சவக் களை வந்துடும்..அதான் சுத்திட்டு இருக்கேன்"னாராம்.! எனக்கு அவரு டெடிக்கேஷன் நினைச்சி என்ன சொல்றதுன்னே தெரில... அப்போ பக்கத்துல இருந்த  கமல் சாரும் அதை நினைவு கூர்ந்தார்.ஹீரோக்கள்ல அழுதா கூட அழகா தெரியிற ஒரே நடிகன். அந்தக் கன்னக்குழி அழகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் Happy birthday Prabhu அண்ணே!

❤❤❤

#வாழ்த்தலாம் வாங்களேன். என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sukumar Fb Post about Sivaji Ganesan & Prabhu Ganesan

People looking for online information on கமல், கமல்ஹாசன், சுகுமார், வசூல் ராஜா, Kamal Haasan, Prabhu, Sivaji Ganesan, Sukumar, Vasool Raja MBBS will find this news story useful.