''மோடி அய்யா.. தயவு செஞ்சு..'' - மகனுடன் நடிகர் சூரி செம லூட்டி. முழு வீடியோவை பாருங்க.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சூரி தனது மகனுடன் அடித்த லூட்டியின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் சூரி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவையில் அசத்தினார் சூரி. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். தனது மகனை படாதபாடு பட்டு குளிக்க வைக்க போராடும் அவர், மோடி அய்யா, தயவு செஞ்சு இந்த கொரோனா சீக்கிரம் விரட்டிடுங்க, வீட்டுல அக்கபோர் தாங்கல என பேசிய கலகலப்பான வீடியோவை பதிவிட்டுள்ளார். சூரியன் இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Tags : Soori, Coronavirus