'மகளை முதல்முறை கையில் வாங்கிய போது..!' - மகளுக்காக நடிகர் சஞ்சீவ் எடுத்த முடிவு.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சஞ்சீவ் தனது மகளின் போட்டோவுடன் எமோஷனலான பதிவையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குளிர் 100 டிகிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சீவ் கார்த்திக். இவர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தார். அத்தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானஸாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.
இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் பதிவை வெளியிட்டுள்ளார். பிறந்தவுடன் தனது மகளை முதல்முறையாக கையில் வாங்கிய போது எடுத்த போட்டோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள அவர், ''என் பொண்ணு, எனக்கு வாழ்க்கையில் கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம். அவளுக்கான உலகத்தை நான் அமைச்சு கொடுப்பேன்'' என பதிவிட்டுள்ளார். சஞ்சீவ் வெளியிட்ட இந்த க்யூட் போட்டோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.