நம்ம மாநாடு ப்ரேம்ஜிக்கு இருக்குற அதே பிரச்சனைதான் மாதவனுக்கும் இருக்காம்.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ப்ரேம்ஜியை போல மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் ஹான்ட்சம் ஹீரோவாக புகழப்படுபவர் மாதவன். அலைபாயுதே, மின்னலே, ரன் என இவர் நடித்த படங்களின் மூலம் தனக்கென தனி பெண் ரசிகர்களை இவர் உருவாக்கினார். மாதவன் தற்போது அனுஷ்கா ஜோடியாக சைலன்ஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கோரோனா வைரஸ் குறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'ஆரோக்கியமாக இருப்பதற்காக ஜிம் செல்லாமல் இருப்பேன் என ஒருநாளும் நினைக்கவில்லை' என அவர் பதிவிட்டுள்ளார். இதே பதிவை நேற்று சிம்புவின் மாநாடு படத்தில் நடிக்கும் ப்ரேம்ஜியும் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 18, 2020
Tags : Premji Amaran, Madhavan, Simbu, Venkat Prabhu, Maanaadu, Corona Virus