'நண்பன்', 'காதலில் சொதப்புவது எப்படி?, 'பீட்சா', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் பூஜா ராமச்சந்திரன். இவர் நடிக்கவருவதற்கு முன்பு எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் எஸ்எஸ் மியூசிக்கில் சக தொகுப்பாளர் விஜே கிரேக்கை 2010ல் திருமணம் செய்து 2017ல் விவகாரத்து செய்துள்ளார். பின்பு நடிகர் ஜான் குக்கேன் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு பிக்பாஸ் தெலுங்கு சீசன் 2வில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் பூஜாவின் கணவர் நடிகர் ஜான் கொக்கேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துகள். ஒயின் எப்படி காலம் ஆக ஆக அதன் இனிப்பு தன்மை கூடுமோ அது போல நீ வயது கூடக் கூட மிகவும் அழகாகிக்கொண்டே செல்கிறாய். ஒவ்வொரு நாளும் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy Birthday my love @Poojaram22 . Just like wine gets sweeter as it gets older, you keep getting more and more beautiful with age. I fall a little more in love with you with each passing day. 😘😘😘😘😘😘. #happybirthday #birthdaygirl #soulmate #mallugirl #couplegoals pic.twitter.com/Fr0bvaGzkZ
— Highonkokken (@johnkokken1) March 22, 2020