Reliable Software
www.garudabazaar.com

ஜெயம் ரவியின் அடுத்த அதிரடி... இரும்புத்திரை பட பிரபலத்துடன் வைரலாகும் புதிய பட தகவல்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. கடைசியாக பூமி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு 25வது படம். இந்த படத்தை இயக்குனர் லக்ஷ்மண் எழுதி இயக்கி இருந்தார். சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் இந்த படம் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியானது.

actor jeyam ravi next with this director நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த அதிரடி

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து பல சுவாரசியமான படங்களை தன் வசம் வைத்துள்ளார். முக்கியமாக நடிகை டாப்ஸியுடன் முதல் முறையாக அவர் இணையும் ஜன கண மன என்ற படத்தை இயக்குனர் அஹமத் இயக்குகிறார். அதன்பின்பு பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து. அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.

actor jeyam ravi next with this director நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த அதிரடி

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. விஷால் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' படத்தை எழுதிய அறிமுக இயக்குனர் ஆண்டனியின் இயக்கத்தில் தான் அடுத்ததாக அவர் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிக்க இருக்கிறார். மேலும் வரும் ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கலாம் என்று தெரிகிறது.

Tags : Jeyam Ravi

மேலும் செய்திகள்

actor jeyam ravi next with this director நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த அதிரடி

People looking for online information on Jeyam Ravi will find this news story useful.