நடிகர் ஜெயம் ரவி நடிக்கப் போகும் அடுத்த படம்... அவர் தான் இயக்குனரா?... வைரலாகும் புதிய தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்ஷ்மண் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது. ஜெயம் ரவியின் 25-வது படம் என்பதால் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

jeyam ravi next film news goes viral ஜெயம் ரவி நடிக்கப் போகும் அடுத்த படம்

தியேட்டரின் வெளியீட்டிற்க்காக மட்டுமே மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படம் தவிர்க்க முடியாத கால சூழ்நிலைகளால் தியேட்டரில் வெளியிட முடியாத நிலையில் இப்படம் "Disney Hotstar தளத்தில் வெளியாகிறது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி அடுத்து பூலோகம் பட இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை Screen Scene Entertainment நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், ஷூட்டிங் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து துவங்க இருப்பதாகவும் தெரிகிறது.

Tags : Jeyam Ravi

மேலும் செய்திகள்

jeyam ravi next film news goes viral ஜெயம் ரவி நடிக்கப் போகும் அடுத்த படம்

People looking for online information on Jeyam Ravi will find this news story useful.