www.garudabazaar.com

எனக்கு 'பயம்'லாம் கெடையாது... பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதை 'உறுதி' செய்த நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் அஸீம் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் விரைவில் செல்லவிருக்கிறார். தற்போது ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் குவாரண்டைனில் அஸீம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அநேகமாக வருகின்றன ஞாயிறன்று எவிக்ஷன் முடிந்தவுடன் அஸீமின் எண்ட்ரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Azeem confirmed his Wildcard Entry in Bigg Boss

அர்ச்சனா, சுசித்ரா ஆகியோரை தொடர்ந்து மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக அஸீம் செல்லவிருக்கிறார். பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானியுடன் இவர் ஏற்கனவே சீரியல்களில் இணைந்து நடித்து இருப்பதால் இவரின் வரவு வீட்டுக்குள் பல அதிர்வுகளை உண்டாக்கலாம் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

இந்த நிலையில் அஸீம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுருக்கும் போஸ்ட் ஒன்று பலரையும் புருவம் உயர்த்த செய்துள்ளது. அதில், '' என் நண்பனாக இருக்க தகுதி தேவை இல்லை, ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேணும்டா 👈🏻 வளர்த்துக்கொள் !! பயமா எனக்கா ?? Ha ha ha,'' என தெரிவித்து இருக்கிறார். இதை எதற்காக அவர் பதிவு செய்தார் என்பது தெரியவில்லை.

ஆனால் ஹேஷ்டேக்கில் விஜய் டெலிவிஷன், ஹாட்ஸ்டார் போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். இதுநாள்வரை பல்வேறு யூகங்கள் அவரது பிக்பாஸ் எண்ட்ரி குறித்து வெளியானது. ஆனால் அதுகுறித்து அஸீம் எந்தவித விளக்கமும் வெளியிடவில்லை. தற்போது முதன்முறையாக அஸீம் தன்னுடைய எண்ட்ரியை உறுதி செய்து போஸ்ட் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Azeem confirmed his Wildcard Entry in Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.