www.garudabazaar.com

கடுமையான உடற்பயிற்சியோடு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் தனது வீட்யோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Aishwarya Rajinikanth World Health day Tweet Goes Viral

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து  '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது லைகா நிறுவனத்துக்காக புதிய படமும், அது போக இந்தியில் ஒரு படத்தையும் இயக்க உள்ளார்.  இவர் இயக்கிய 'சினிமா வீரன்' என்ற ஆவண படமும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பயணி மியுசிக் வீடியோவும் சமீபத்தில் வெளியானது.

Aishwarya Rajinikanth World Health day Tweet Goes Viral

சில மாதங்களுக்கு இயக்குனர் ஐஸ்வர்யா தனது கணவரும் கஸ்தூரி ராஜாவின் மகனுமான தனுசை பிரிய முடிவு செய்து பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர். நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். 

இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த முடிவு பரபரப்பை கிளப்பியது.

"18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்". என அறிக்கையில் இருவரும் கூறி இருந்தனர்.

Aishwarya Rajinikanth World Health day Tweet Goes Viral

தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரோவோடு இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு இந்த உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். 

 

அதில். "ஆரோக்கியமே உங்களின் மிகப்பெரிய செல்வம்..சுத்தமாக சாப்பிடுங்கள்...

நன்றாக நீர் அருந்துங்கள்..உங்கள் உள் கனவு காண்பவருக்கு எப்போதும் போதுமான தீணி போடவும்.. வலிமையானவர், மெலிந்தவர், ஆனால் ஒருபோதும் அர்த்தமற்றவர் இல்லை" என டிவீட் செய்துள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth World Health day Tweet Goes Viral

People looking for online information on Aishwarya, Aishwarya Rajinikanth, World Health Day will find this news story useful.