www.garudabazaar.com

‘96 ஜானு’ நம்ம கௌரி கிஷன் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கும் ‘இளையராஜா’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில், ‘96’ பட புகழ் கௌரி கிஷன் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

96 fame Gouri Kishan to act in Ilaiyaraja musical

காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் பிரகாஷ் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் இந்த புதிய படத்தை இயக்குகிறார்.

‘உலகம்மை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் 96 மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்த நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

1970-ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை  மையமாகக் கொண்டு நெல்லையில் நடக்கும் கதைதான் உலகம்மை. பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

K.V.மணி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, சரவணன் திரைக்கதை எழுதியுள்ளார். குபேந்திரன் வசனம்  எழுதுகிறார். சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

96 fame Gouri Kishan to act in Ilaiyaraja musical

People looking for online information on Gouri Kishan, Ilaiyaraja, Illayaraja will find this news story useful.