Gautami : அட.. நடிகை கவுதமிக்கு இவ்ளோ பெரிய மகளா..? ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்..
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் 80களில் இருந்தே பிரபலமான நடிகை கவுதமி. 1988-ல் ரஜினிகாந்த், பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

Also Read | “ரச்சிதமே ரச்சிதமே.. மாஸ்டர் மனச கலச்ச மந்திரமே😍” - ஃபினாலேவில் கலகலப்பூட்டிய கேமரா வாய்ஸ்
முன்னதாக தெலுங்கு, மலையாள படங்களிலும் தோன்றுய நடிகை கவுதமி, தமிழில், அபூர்வ சகோதரர்கள்(1989), ராஜா சின்ன ரோஜா(1989), பணக்காரன் (1990), தர்மதுரை(1991), நீ பாதி நான் பாதி(1991), தேவர் மகன்(1992), ஹானஸ்ட் ராஜ்(1994), நம்மவர் (1994), குருதிப்புனல்(1995), இருவர் (1997) ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தவிர, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜெண்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு நடனமாடிய கவுதமி, கடைசியாக தமிழில் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை கவுதமியின் மகள் சுப்புலக்ஷ்மி பாட்டியாவுடன் கவுதமி எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை கவுதமிக்கு இவ்வளவு பெரிய மகளா? இத்தனை நெடுநெடுவென வளர்ந்துவிட்டாரே? என ஆச்சரியப்பட்டும், வாழ்த்தியும் வருகின்றனர்.