ஏ.ஆர்.ரஹ்மானுக்கே 'நோ' To கலைமாமணி வரை, பரவை முனியம்மா பற்றி உங்களுக்கு தெரியாத 8 ரகசியங்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்மதுரையை அடுத்த பரவை என்பதே முனியம்மா பாட்டியின் சொந்த ஊர். எனவே அந்த ஊரின் பெயரை தனது பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டார். இவருக்கு வயது தற்போது 83.
இவருக்கு 16 வயதில் திருமணம் ஆகி 6 பிள்ளைகள் இருக்கின்றனர். இவரது கணவர் இறந்து விட்டார். பரவை முனியம்மாவுக்கு கடைசியாக மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளி மகன் ஒருவர் இருக்கிறார். பாட்டு, நடிப்பு என்று தனது மகனை இத்தனை காலம் அவரே பார்த்துக் கொண்டார்.
நாட்டுப்புற பாடல்கள் பாடி வந்த இந்தப் பாட்டி, சினிமாவில் பாட வருவதற்கு முன்னாலேயே மதுரையில் மிகவும் பேமஸ். கச்சேரிகள், ஊர் திருவிழாக்கள் என எப்போதும் இவரது வருகைக்காக பல ஊர்கள் காத்து கிடந்தன. 20 வருடங்கள் பாடல் துறையில் இருந்த பிறகே முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது.
இவர் சினிமாவில் அறிமுகம் ஆன படம் 'தூள்' என்பது அனைவருக்கு தெரிந்த விஷயம். ஆனால் அதற்கு முன்பதாகவே இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அறிமுகம் ஆகி இருக்க வேண்டும். ஆம் சூப்பர்ஸ்டார் நடித்த 'கொக்கு சைவ கொக்கு' பாடலுக்கு இவரைத் தான் முதலில் அணுகி இருக்கிறார்கள். ஆனால் பாட்டிக்கு விவரம் போய் சேர்வதற்கு முன்பே பாட்டியின் உடன் இருப்பவர்கள் முடியாது என்று மறுத்து விட, அந்த செய்தி பத்திரிகைகளில் "ரஹ்மானுக்கு நோ சொன்ன பாடகி" என்று பரபரப்பாக பேசப்பட்ட போது தான் அவருக்கே தெரிய வந்ததாம். பின்பு எப்படியாவது ஒருமுறை அவரை பார்க்க வேண்டும் என்று இருந்தவருக்கு அதற்கு சமயம் இல்லாமலே போய் விட்டது.
நாட்டுப்புற பாடல்கள் பாடி வந்த காலத்தில் இருந்தே சரி இவர் பல வெளிநாடுகளுக்கும் போய் பாடி இருக்கிறார். பரவை முனியம்மா எத்தனை வெளிநாடுகளுக்கு போய் பாடினாலும் முகத்திற்கு 'பவுடர்' போட மாட்டாராம். வெறும் மஞ்சல் மட்டும் பூசுவதையே வழக்கமாக காலம் முழுவதும் வைத்திருந்தாராம். மேலும் அவர் பல வானொலிகளில் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.
பரவை முனியம்மா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையால் 'கலைமாமணி' விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
இவரது முதல் படமான 'தூள்' படத்தின் ஷூட்டிங்கின் போது எல்லாரை காட்டிலும் நடிகை ஜோதிகாவும் இவரும் ரொம்ப கிளோஸாம். கிட்டத்தட்ட நண்பர்கள் போல் பேசி மகிழ்ந்ததாக அவரே பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.
இவரது வாங்கி கணக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் 6 லட்சம் ரூபாய் போட்டிருக்கிறார். அதிலிருந்து வரும் வட்டியை வைத்தே, இத்தனை காலம் மருத்துவம் மற்றும் குடும்ப செலவுகளை பரவை முனியம்மா பார்த்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.