விஷாலின் 'துப்பறிவாளன் 2' - இந்த டைம் கணியன் பூங்குன்றனின் விசாரணை எப்படி இருக்கும் ?
முகப்பு > சினிமா செய்திகள்மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்திருந்த 'துப்பறிவாளன்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு துப்பறிவாளன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் மிஷ்கின் இயக்குவதாகவும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் துவங்கி சில நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் குறிப்பிட்ட சில காரணங்களால் மிஷ்கின் விலகுவதாகவும் இந்த படத்தை விஷால் தொடர்ந்து இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து துப்பறிவாளன் 2 குறித்த அறிவிப்பை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மார்ச் 11) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பில் விஷால் மற்றும் இளையராஜாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.