'இன்று நேற்று நாளை 2' ரசிகர்களுக்கு... ஒரு சூப்பர் 'ஸ்வீட்' நியூஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2015-ம் ஆண்டு விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் இன்று நேற்று நாளை. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இன்று நேற்று நாளை படத்தின் 2-வது பாகத்தை தயாரிப்பதாக திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2-வது பாகத்தை ரவிக்குமாரின் அசிஸ்டண்ட் கார்த்திக் இயக்குவார் என்றும் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், கருணாகரன் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று நேற்று நாளை 2 ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்|Good news for indru netru Nallai2 fans

இந்த நிலையில்  'இன்று நேற்று நாளை 2' படம் பற்றிய அறிவிப்பு சென்ற வருடமே வெளிவந்த நிலையில் தற்போது தான் கதை தயாராகி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இவ்வளவு காலதாமதம் ஏன்? என்பதற்கான விளக்கமும் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு திருக்குமரன் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளது. “ஆர்.ரவிக்குமார் அயலான் படத்தை இயக்கும் பணிகளில் பிஸியாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் தற்போது இறுதி வடிவத்தை எட்டிவிட்டது. ஸ்கிரிப்ட் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. காமெடியாக இருப்பதால், ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்” என தெரிவித்து இருக்கிறது.

Entertainment sub editor