நடிகர் சங்கத்திற்கு முதல் டொனேஷனாக பெரிய தொகை... கொடுத்தது யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து விதமான திரைப்பட படப்படிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி | Producer Ishari K Ganesh Don

இதனையடுத்து திரைப்படம் சார்ந்து பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக FEFSI எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஏறக்குறைய பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறும் அறிக்கை மூலம் கொட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பல்வேறு திரைப்பட பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை பணமாகவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களாகவும் செய்து வருகின்றனர். நடிகர்கள் உதவி செய்யும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் தனி அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் சார்பாக உதவிகள் கேட்கப்பட்டு, உதவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. அதே போல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும் மற்றும் சில உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது.

இதனை பரிசீலனை செய்யும் போது நமது உறுப்பினர்கள் பலரும் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது தெரியவருகிறது. எனவே அவர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதும், அவர்களுக்கு உதவுவதும் நமது தலையாய கடமையாகும். 

நமது சங்கத்தை சேர்ந்த நல் உள்ளம் கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கீழ்கண்ட வங்கி கணக்கில் தங்களால் இயன்ற நிதியை வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்''.  இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Entertainment sub editor