விஷாலின் அயோக்யாவில் சன்னி லியோனுக்கு பதில் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘அயோக்யா’ திரைப்படத்தின் குத்துப் பாடலுக்கு நடனமாட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

Not Sunny Leone, Shraddha Das to feature in Vishal's Ayogya for a special Song

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘டெம்பர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக ‘அயோக்யா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ள இப்படத்தில் இடம்பெறும் குத்துப் பாடல் ஒன்றுக்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், சன்னி லியோன் பிசியாக இருப்பதாலும், அவரது சம்பளம் கூடுதலாக இருப்பதாலும், அவருக்கு பதில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை, தியேட்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.