தெறி பேபி - ரீமேக்காகிறது தெறி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, மகேந்திரன், ராதிகா உள்ளிட்டோர் நடித்து, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் 'தெறி'.  விஜய் குமார், ஜோசஃப் குருவில்லா என இரண்டு கெட்டப்புகளில் விஜய் தோன்றி திரையில் தெறிக்கவிட்டிருந்த இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

Vijay's Theri is remake to telugu starring Ravi Teja

மேலும் இந்த படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் குறும்பான நடிப்பும், விஜய்க்கும் நைனிக்காவுக்கும் இடையேயான காட்சிகளும் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவரந்த்து.

ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்த படத்தை கண்டிரீகா இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் பவன் கல்யாண் நடிக்கவிருந்ததாகவும், தற்போது அவர் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் ரவி தேஜா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.