விஜய் படத்தில் இணையும் பாலிவுட் நடிகர் - தளபதி 63 வில்லன் இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோஃப் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Jackie Shroff to play main villain in Vijay's Thalapathy 63?

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின் படி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோஃப் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

இந்திய சினிமாவில் முக்கிய பிரபலமாக அறியப்படும் ஜாக்கி ஷ்ரோஃப், தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றார். தற்போது, மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் ஜாக்கி ஷ்ரோஃப் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.