'துப்பாக்கி' பாணியில் உருவாகும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தலைவர் 166’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பேட்ட’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth-A.R.Murugadoss's next to be shot in Mumbai like Thuppakki

‘சர்கார்’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படமும் முழுக்க முழுக்க மும்பை பின்னணியில் உருவாகியிருந்தது.

தற்போது அதே பாணியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ திரைப்படத்தையும் மும்பையில் படமாக்க திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.