போஸ் வெங்கட்-க்காக பாடகர் அவதாரம் எடுத்த பிரபல காமெடி நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் போஸ் வெங்கட் இயக்கி வரும் புதிய திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் பாடல் பாடியுள்ளார்.

Robo Shankar croons a song for Bose Venkat’s directorial

ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கும் இப்படத்திற்கு இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அறிமுக நடிகை காயத்ரி (யார் கண்ணன் மகள்), வலீனா ப்ரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போஸ் வெங்கட் இயக்கத்தில் காதல் திரைப்படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களை பெருமைப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றி பேசும் இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் பாடியுள்ளார்.

இது குறித்து பேசிய போஸ் வெங்கட், தான் ஒரு ஆட்டோ ஒட்டுநராக தான் தொழிலை தொடங்கினேன். தற்போது சினிமாவில் நல்ல நிலையில் இருக்கிறேன். என் தொழிலுக்கு மரியாதை செலுத்த விரும்பினேன். பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, ராகம் ஸ்ருதி பற்றி தெரியாத ஒருவர் தான் பாட வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கான குரலை தேடியபோது ரோபோ ஷங்கரின் குரலில் பாடலை ரெக்கார்ட் செய்தோம். இசையமைப்பாளர் ஹரிசாய் சில துள்ளலான விஷயங்களை சேர்த்துள்ளார்.