'அனிருத்துடன் மீண்டும் இணைவது எப்போது ?' - ரசிகரின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கனா' படத்தின் வெற்றிக்கு பிறகு சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம்  'தீர்ப்புகள் விற்கப்படும்'. ஹனீபி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க, அறிமுக இயக்குநர் தீரன் இந்த படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

Sivakarthikeyan says he will work with Anirudh very soon

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டார். அதற்கு பின்னூட்டமிட்ட ரசிகர் ஒருவர், நீங்களும் இசையமைப்பாளர் அனிருத்தும் மீண்டும் எப்போது இணையப்போகிறீர்கள் ? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு விரைவில் என சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.

சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் உருவான 'எதிர் நீச்சல்', 'மான் கராத்தே', 'காக்கி சட்டை', 'ரெமோ' ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இருவரும் இணைந்து கடைசியாக 'வேலைக்காரன்' படத்தில் பணிபுரிந்தனர்.

மேலும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்களான் 'மிஸ்டர் லோக்கல்' படத்துக்கு ஹிப்ஹாப் தமிழாவும், 'இன்று நேற்று நாளை' ரவிக்குமார் இயக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானும், மித்ரன் இயக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைக்கவுள்ளனர்.