பொள்ளாச்சி சம்பவம்: தெரு பொறுக்கி நாய்களை அடிச்சு ஓடவிடணும் - நடிகை அதுல்யா காட்டம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு பெரிய தண்டனை கொடுக்காமல் சும்மா விட்டுடாதீங்க என உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு நடிகை அதுல்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Actress Athulya Ravi burst out on Pollachi Rapists, advices Girls not to believe anyone easily

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் மற்றும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த காமக் கொடூரர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்கச் செய்தது. இச்சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த நடிகை அதுல்யா ரவி பொள்ளாச்சி சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ‘இதுபோன்ற தெரு பொறுக்கி நாய்களால் ஒரு சில நல்ல பசங்க பெயரும் கெட்டுப்போகிறது. மேலும் இதுபோன்ற தவறு பிற நாடுகளில் நடந்தால் என்ன தண்டனை கொடுப்பார்களோ அதே தண்டனையை இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறி பெண்களையும் ஜாக்கிரதையாக தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக சமுதாயத்தை எதிர்கொண்டு இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். மிகவும் உணர்வுபூர்வமான இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம் எனவும் அதுல்யா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கருத்து கூறுபவர்களை சிலர் ஆபாசமாக கமெண்ட் செய்வது முறையல்ல. உங்கள் வீட்டு பெண் பாதிக்கப்பட்டிருந்தாலும் இப்படி தான் பேசுவீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மக்கள் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும் என வீடியோவில் காட்டமாக பேசியுள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம்: தெரு பொறுக்கி நாய்களை அடிச்சு ஓடவிடணும் - நடிகை அதுல்யா காட்டம் வீடியோ