'சாமி 2’-வை தொடர்ந்து அடுத்த மல்டி ஸ்டார் படம் பற்றிய அறிவிப்பு இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கோடத்தில் சமிக்ஷம் பாலன் வக்கீல்’ படத்தை தொடர்ந்து திலீப் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

After Vikram's Saamy 2, Shibu Thameens to produce Dileep's film Jack Daniel

‘ஜாக் டேனியல்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.எல்.பூரம் ஜெயசூர்யா இயக்குகிறார். இப்படத்தை சீயான் விக்ரம் நடித்த ‘சாமி 2’ படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் ஹீரோயினாக அஞ்சு குரியன் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அறிவிப்பினை ஷிபு தமீன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து புரொஃபசர் தின்கன் என்ற திரைப்படத்தில் திலீப் நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.